தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

உலக சமூக மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்தி

மௌனம் காத்தல் என்ற சமுதாய நோயால் பலரும் பீடிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்காக குரல் எழுப்ப இயலாத புலம்பெயர்ந்தோர் மீது குற்றங்கள் அதிகரிக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தேவையற்ற மக்களைப் புறந்தள்ளும் கலாச்சாரத்தை நியாயப்படுத்துவதற்கென, அநீதிகளை மறுத்து ஒதுக்கவேண்டும் என்ற கொள்கையை சுட்டிக்காட்டும் சமூகப் போக்கு, இன்றைய உலகில் வளர்ந்துவருவதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கவலையை வெளியிட்டுள்ளார்.

புலம்பெயர்தல் என்ற மையக்கருத்துடன் மெக்சிகோ நகரில் இடம்பெறும் எட்டாவது உலகக் கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், புலம்பெயர்ந்தோர், மற்றும் குடியேற்றதாரர் சந்திக்கும் அநீதிகளைக் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

மௌனம் காத்தல் என்ற சமுதாய நோயால் பலரும் பீடிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்காக குரல் எழுப்ப இயலாத புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேறத்தாரர் அனைவர் மீதும், புறக்கணிக்கப்படுவது, சுரண்டப்படுவது, பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாவது, உரிமைகளை இழப்பது போன்ற குற்றங்கள் இழைக்கப்படுகின்றன என்று திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

அநீதிகளைக் கண்டித்தால் மட்டும் போதாது, மாறாக, நியாயமான தீர்வு காண்பதற்குத் தேவையான ஒவ்வொருவரின் கடமையும் வலியுறுத்தப்பட்ட வேண்டும் என்ற அழைப்பையும் தன் செய்தியில் முன்வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித உரிமைகள், நாட்டு எல்லைகள், அரசியல் கொள்கைகள், காலநிலை மாற்றம் என்ற பல தொடர்புடைய கருத்துக்களை இம்மாநாடு விவாதிக்க உள்ளது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

புலம்பெயர்வோருக்கும், அடைக்கலம் தேடுவோருக்கும் தேவையான உதவிகளை வழங்குவதில், பொறுப்புணர்வுகளை அனைவரும் பகிர்ந்து செயல்பட வேண்டும் என்ற அழைப்பையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் முன்வைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2018, 16:18