கடந்த 12 மாதங்களில் இறையடி சேர்ந்த கர்தினால்கள், ஆயர்கள் அனைவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, திருப்பலி நிறைவேற்றியபோது கடந்த 12 மாதங்களில் இறையடி சேர்ந்த கர்தினால்கள், ஆயர்கள் அனைவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, திருப்பலி நிறைவேற்றியபோது 

கர்தினால்களின் ஆன்ம இளைப்பாற்றி திருப்பலியில் திருத்தந்தை

எவ்வாறு அறுவடையை, விதையின் தரம் நிர்ணயிக்கிறதோ, அதேவண்ணம் நம் இறுதி நோக்கத்தால் நம் வாழ்வுப் பயணம் வடிவமைக்கப்படுகிறது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாயின் கருவறையில் துவங்கி, நம் வாழ்க்கைப் பயணம் முழுவதும், பிறருக்கு ஆற்றும் பணியில் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று இச்சனிக்கிழமையன்று புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த 12 மாதங்களில் இறையடி சேர்ந்த கர்தினால்கள், ஆயர்கள் அனைவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, இச்சனிக்கிழமை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பத்து கன்னியர் உவமையை மையப்படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மணமகனாம் இயேசுவைச் சந்திக்க நாம் காத்திருப்பது, நம் வாழ்வுக்கு பொருளையும், நோக்கத்தையும் தருகிறது என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை, எவ்வாறு அறுவடையை, விதையின் தரம் நிர்ணயிக்கிறதோ, அதேவண்ணம் நம் இறுதி நோக்கத்தால் நம் வாழ்வுப் பயணம் வடிவமைக்கப்படுகிறது என்று கூறினார்.

மணமகனைச் சந்திப்பதே நம் வாழ்வுப் பயணத்தின் இலக்கு என்றால், அவ்வாழ்வில் வழங்கப்பட்டுள்ள நேரம், அன்பில் வளர்வதற்குரிய நேரம் என்றும், இறைவனுடன் அன்பில் இணைவதே நம் வாழ்வின் மையம் என்றும் திருத்தந்தை, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

கன்னியர் எடுத்துச் சென்ற விளக்குகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயைக் குறித்து பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊற்றப்படும் எண்ணெய், விளக்கில் மறைந்திருந்து செயலாற்றுவது, விளக்கு எரிய, எரிய, எண்ணெயின் அளவு குறைவது, விளக்கு துவக்கத்திலேயே தயார் படுத்தப்பட வேண்டியது என்ற மூன்று அம்சங்களைச் சுட்டிக்காட்டி, அவற்றுடன் விசுவாசிகளின் செயல்பாட்டையும் ஒப்புமைப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2018, 16:10