சோதனை பதிப்பு

Cerca

Vatican News
இலவுரன்தீனோ கல்லறைத் தோட்டத்தில், திருப்பலியாற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை இலவுரன்தீனோ கல்லறைத் தோட்டத்தில், திருப்பலியாற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை  (ANSA)

இலவுரன்தீனோ கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தையின் மறையுரை

நம்மைவிட்டுப் பிரிந்து சென்றாலும், நமக்காக அன்புடன் காத்திருப்பவர்களை நினைவுகூரும் நம்பிக்கையின் நாள் இது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் திருநாள் என்பது, கடந்த காலத்தையும், நம்மோடு வழி நடந்தவர்களையும், நமக்கு வாழ்வு தந்தவர்களையும் நினைவுகூரும் நாள் என்று, இவ்வெள்ளியன்று நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் திருநாளையொட்டி, உரோம் நகரின் இலவுரன்தீனோ கல்லறைத் தோட்டத்தில், நவம்பர் 2, வெள்ளியன்று பிற்பகல் திருப்பலியாற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நம்மைவிட்டுப் பிரிந்து சென்றாலும், நமக்காக அன்புடன் காத்திருப்பவர்களை நினைவுகூரும் நம்பிக்கையின் நாள் இது என்று கூறினார்.

பணிவுடையோர், நீதியின் மீது தாகமுடையோர், வறியோர், அமைதியை விரும்புவோர், மற்றும், துன்புறுத்தப்படுவோர் ஆகிய அனைவரும் பெறும் பேறுகள் குறித்து இயேசு மலைப்பொழிவில் கூறியுள்ள எண்ணங்கள், நம் உலகப்பயணத்தில் வழிகாட்டும் விளக்குகளாக உள்ளன என்று, திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

நம்மைவிட்டுப் பிரிந்துசென்றோரைக் குறித்து நம் நினைவுகளை இழக்காமல் இருக்கவேண்டும் எனவும், நமக்கு நம்பிக்கை வழங்கும்படியாகவும், நமக்காக அன்புடன் காத்திருப்பவர்களை நோக்கிச் செல்லும் ஒளியை புரிந்துகொள்ளும் திறனை வழங்கும்படியாகவும் இறைவனை மன்றாடுவோம் என்று, தன் மறையுரையில் திருத்தந்தை விண்ணப்பித்தார்.

03 November 2018, 16:23