மூவேளை செப உரையின்போது - 041118 மூவேளை செப உரையின்போது - 041118 

கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உயிரிழப்பு

எகிப்தில் கொல்லப்பட்ட திருப்பயணிகளுக்கு செப உறுதியையும், காப்டிக் கிறிஸ்தவ சபையினருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளியிடும் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

எகிப்தின் மின்யா நகரருகே, காப்டிக் கிறிஸ்தவத் திருப்பயணிகள், வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கப்பட்டது குறித்து, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்ட இத்திருப்பயணிகளுக்கு தன் செப உறுதியையும், அவர்கள் சார்ந்திருக்கும் காப்டிக் கிறிஸ்தவ சபையினருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளியிடுவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 20,000த்திற்கும் அதிகமான விசுவாசிகளுடன் இணைந்து, உயிரிழந்த திருப்பயணிகளுக்காக செபித்தார்.

எகிப்தின் மின்யா நகரருகே அமைந்துள்ள காப்டிக் துறவு மடத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டபின் திரும்பிக் கொண்டிருந்த இரு பேருந்துகள் மீது, தீவிரவாதக்குழு ஒன்று, துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 7 பேர் உயிரிழந்துள்ளனர், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏற்கனவே, இத்தகையத் தாக்குதல் ஒன்று, இதே காப்டிக் துறவு மடத்திற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த திருப்பயணிகள் மீது, கடந்த ஆண்டு மே மாதத்தில் நடத்தப்பட்டதில், 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2018, 12:56