தேடுதல்

திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை -111118 திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை -111118 

ஏழைக் கைம்பெண், கிறிஸ்தவ வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டு

இறைவன், அளவுகளையும், எண்ணிக்கைகளையும் கருதுபவர் அல்ல, மாறாக, தரமான வாழ்வைக் கருதுபவர் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அனைத்தையும் ஆண்டவனுக்கு வழங்கிய ஏழைக் கைம்பெண், கிறிஸ்தவ வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 11, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் கூறினார்.

இஞ்ஞாயிறு திருப்பலியில் வாசிக்கப்பட்ட நற்செய்தியை மையப்படுத்தி, நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, தங்களை முக்கியமானவர்கள் என்று கருதிய செல்வந்தர்களையும், பணிவுடன் இறைவனை நாடிவந்த கைம்பெண்ணையும் ஒப்புமைப்படுத்திப் பேசினார்.

இறைவன், அளவுகளையும், எண்ணிக்கைகளையும் கருதுபவர் அல்ல, மாறாக, தரமான வாழ்வைக் கருதுபவர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளத்தின் சிந்தனைகளை நன்கு அறியும் இறைவன், தூய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார் என்று எடுத்துரைத்தார்.

வறுமையில் வாழ்ந்தாலும், தன்னை இறைவனுக்கு முற்றிலும் அர்ப்பணித்த அன்னை மரியா, நம்மையே இறைவனுக்குக் காணிக்கையாக்குவது எப்படி என்பதை சொல்லித்தருவாராக என்ற விண்ணப்பத்துடன், திருத்தந்தை, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2018, 13:00