தேடுதல்

மாமன்ற உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வழங்கிய நினைவு பரிசு மாமன்ற உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வழங்கிய நினைவு பரிசு 

மாமன்ற உறுப்பினர்களுக்கு திருத்தந்தையின் நினைவுப்பரிசு

இயேசுவின் மார்பில் இளம் சீடர் யோவான் சாய்த்திருப்பதைப்போன்று உருவாக்கப்பட்டுள்ள வெண்கலப் பதக்கத்தை, நினைவு பரிசாக, மாமன்ற உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வழங்கினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 3ம் தேதிமுதல், 28ம் தேதி முடிய, வத்திக்கானில் இடம்பெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நினைவுப் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

இளையோரை மையப்படுத்தி நடைபெற்றுவரும் இந்த மாமன்றத்தின் நினைவாக, திருத்தந்தை வழங்கியுள்ள இப்பரிசுப்பொருள், இயேசுவையும், அவர் அன்பு செய்த இளம் சீடர் புனித யோவானையும் சித்திரிக்கும் ஒரு வெண்கலப் பதக்கம்.

இறுதி இரவுணவில், நிகழ்ந்த ஒரு காட்சியாக சிரித்திரிக்கப்பட்டுள்ள இந்த பதக்கத்தில், இயேசுவின் இடது கரம், அவரது முகத்தின் உயரத்திற்கு உயர்த்தியிருப்பது போலவும், வலது கரம் உணவு கிண்ணத்தில் இருப்பதுபோலவும், அவ்விரு கரங்களுக்கிடையே, இளைய சீடர் யோவான், இயேசுவின் மார்பில் சாய்ந்திருப்பது போலவும், உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த வெண்கலப் பதக்கத்தை, இத்தாலிய கலைஞர், ஜீனோ ஜியானேத்தி (Gino Giannetti) அவர்கள் உருவாக்கியுள்ளதாகவும், இப்பதக்கத்தின் 460 பதிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27, இச்சனிக்கிழமை மாலை நிகழ்ந்த இறுதி அமர்வின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த நினைவுப் பரிசை, தனித்தனியே வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2018, 17:15