லொம்பார்தியா பகுதி ஆயர்கள், அருள்பணியாளர் மற்றும் குருத்துவ மாணவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் லொம்பார்தியா பகுதி ஆயர்கள், அருள்பணியாளர் மற்றும் குருத்துவ மாணவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

நடிகர்களாக அல்ல, உண்மை சாட்சிகளாக வாழ்வோம்

சிலே அரசுத் தலைவரையும், இத்தாலியின் லொம்பார்தியா பகுதி குருத்துவ மாணவர்களையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'சாட்சிகளாக வாழ்வதை விடுத்து, வெறும் நடிகர்களாக மாறிப்போகும் ஆபத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம். நாம் இறைவனின் உயிருள்ள நினைவு' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இச்சனிக்கிழமையன்று காலை, சிலே நாட்டு அரசுத் தலைவர் Sebastián Piñera Echenique அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தன் பயணத்தை, இவ்வெள்ளியன்று துவக்கிய சிலே அரசுத் தலைவர் Piñera அவர்கள், சனிக்கிழமையன்று காலையில் திருத்தந்தையை சந்தித்தார்.

இதே நாளில், இத்தாலியின் லொம்பார்தியா பகுதியிலிருந்து வந்திருந்த குருத்துவ மாணவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

14 ஆயர்கள், 128 அருள்பணியாளர்கள், 35 தியோக்கியோன்கள், 307 குருத்துவ மாணவர்கள், 8 துறவறத்தார், 28 பொதுநிலையினர் என 520 பேர் கொண்ட குழுவை சந்தித்து திருத்தந்தை உரையாற்றினார்.

இச்சனிக்கிழமையன்று காலை இக்குழுவிற்கு, வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஒன்றும் வழங்கினார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2018, 17:06