கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
நாம் செல்ல வேண்டிய இடத்தை நமக்கு காண்பித்து, அந்த இடம் நோக்கி நம்மை அழைத்துச் செல்பவர்களே, நம் காவல் தூதர்கள் என்ற கருத்தை மையமாக வைத்து தன் டுவிட்டர் செய்தியை இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
'நம் வாழ்வில் காவல்தூதர்களின் இருப்பு என்பது, பயணத்தில் நமக்கு உதவுவதற்காக மட்டும் அல்ல, மாறாக, நாம் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இலக்கை நமக்குக் காண்பிப்பதற்குமாகும்' என புனித காவல் தூதர்கள் திருவிழாவையொட்டி, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி கூறுகிறது.
மேலும், இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'இறைவனின் புனிதமிகு தாயே, உம் அடைக்கலம் தேடி ஓடி வருகிறோம். எம்முடைய தேவைகளில் எழுப்பும் விண்ணப்பங்கள் குறித்து, பாராமுகமாய் இராதேயும். அனைத்து ஆபத்துகளிலிருந்தும் எம்மை விடுவித்தருளும், மகிமை நிறை அருள்கன்னியே', என ஒரு செப விண்ணப்பத்தை எழுப்பியுள்ளார்.