திருத்தந்தையுடன் ஜெர்மன் குடியரசின் புதிய தூதர், மைக்கில் கோக் திருத்தந்தையுடன் ஜெர்மன் குடியரசின் புதிய தூதர், மைக்கில் கோக் 

மன்னிப்பு, பொறுமை, உரையாடல் ஆகிய கொடைகளுக்காக...

"வரவேற்கும், மற்றும் நெருங்கியிருக்கும் கொடைகளையும், உரையாடல் மற்றும் பொறுமை ஆகிய கொடைகளையும் ஆண்டவரிடம் கேட்கிறோம்" - திருத்தந்தையின் டுவிட்டர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கலந்துரையாடல், பொறுமை, நெருக்கம் போன்ற கொடைகளை வழங்குமாறு இறைவனை நோக்கிக் கேட்போம் என்ற கருத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"அன்பு கூர்ந்து, மன்னித்து, கண்டனம் செய்யாது வரவேற்கும், மற்றும் நெருங்கியிருக்கும் கொடைகளையும், உரையாடல் மற்றும் பொறுமை ஆகிய கொடைகளையும் ஆண்டவரிடம் கேட்கிறோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றன.

மேலும், இச்சனிக்கிழமை மாலை, 5 மணியளவில், வத்திக்கான் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், 7000த்திற்கும் அதிகமான இளையோரை, திருத்தந்தையும், ஆயர்கள் மாமன்ற தந்தையரும் சந்திக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதற்கிடையே, ஜெர்மன் குடியரசின் சார்பாக, திருப்பீடத்தில் பணியாற்ற வந்திருக்கும் புதிய தூதர், மைக்கில் கோக் (Michael Koch) அவர்களை, இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்து, அவரிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று, அவரது நியமனத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2018, 16:50