தேடுதல்

Vatican News
இளையோருடன் திருத்தந்தை இளையோருடன் திருத்தந்தை  (AFP or licensors)

நம் முயற்சிகளில் மற்றவர்களையும் இணைப்போம்

வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதில் நம் கனவுகள், அன்பு மற்றும் ஆர்வத்துடன், மற்றவர்களும் இணையட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மற்றவர்களோடு இணைந்து நாம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்ற கருத்தை  மையமாக வைத்து இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'வருங்காலத்தை நீங்கள் உங்கள் கரங்களோடும், இதயத்தோடும், அன்போடும், ஆர்வத்தோடும் கனவுகளோடும் கட்டியெழுப்புவீர்கள். மற்றவர்களோடு இணைந்து'  என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், திருத்தந்தைக்கு ஆலோசனைகள் வழங்கும் கர்தினால்கள் அவையின் இணைச் செயலராக, பேரருள்திரு மார்கோ மெல்லீனோ அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

52 வயது நிறைந்த பேரருள்திரு மெல்லீனோ அவர்கள், உரோம் நகரின் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில், திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்.

தற்போது இத்தாலியின் ஆல்பா மறைமாவட்டத்தின் குருகுல முதல்வராக பணியாற்றிவரும் பேரருள்திரு மெல்லீனோ அவர்கள், 2006ம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் 30 வரை, திருப்பீடத்தில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

27 October 2018, 17:10