தேடுதல்

எகிப்தின் இஸ்லாமியத் தலைவர் அகமத் முகம்மது அல்-தய்யீப், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு எகிப்தின் இஸ்லாமியத் தலைவர் அகமத் முகம்மது அல்-தய்யீப், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு 

திருத்தந்தையைச் சந்தித்த எகிப்து இஸ்லாமியத் தலைவர்

"இறை வார்த்தைக்கு நாம் செவிமடுக்கும்போது, நம்மிடமுள்ள மிகச்சிறந்தவற்றை வழங்கத் தேவையான துணிவையும், விடாமுயற்சியையும் பெறுகிறோம்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனின் வார்த்தைக்கு செவிமடுப்பதால் நம்முள் உருவாகும் விளைவுகளை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியை, அக்டோபர் 17, இப்புதனன்று வெளியிட்டார்.

"இறை வார்த்தைக்கு நாம் செவிமடுக்கும்போது, நம்மிடமுள்ள மிகச்சிறந்தவற்றை வழங்கத் தேவையான துணிவையும், விடாமுயற்சியையும் பெறுகிறோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

அக்டோபர் 17, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.723 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 79 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், எகிப்து நாட்டின் புகழ்பெற்ற அல்-அசார் பல்கலைக்கழகம் மற்றும், தொழுகைக்கூடத்தின் தலைவரான, பேராசிரியர், அகமத் முகம்மது அல்-தய்யீப் அவர்கள், அக்டோபர் 16, இச்செவ்வாய் பிற்பகல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, சாந்தா மார்த்தா இல்லத்தில் தனியே சந்தித்துப் பேசினார் என்று, திருப்பீட தகவல் தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

இவ்விரு தலைவர்களுக்கும் இடையே ஏற்கனவே ஒரு சில சந்திப்புக்கள் நிகழ்ந்துள்ளன என்பதும், குறிப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், எகிப்து நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், பேராசியர் அல்-தய்யீப் அவர்களின் அழைப்பை ஏற்று, அல்-அசார் பல்கலைக்கழகத்தில், உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2018, 16:48