தேடுதல்

இளையோருக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இளையோருக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இலத்தீன் அமெரிக்க, கரீபியன் தீவு இளையோர் திருத்தந்தைக்கு செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அருகாமை, அவர் கூறும் சொற்கள் மற்றும் எடுத்துக்காட்டான வாழ்வு ஆகியவை, இறைவன் திருஅவைக்கு வழங்கியுள்ள கோடை - இளையோர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அருகாமை, அவர் கூறும் சொற்கள் மற்றும் எடுத்துக்காட்டான வாழ்வு ஆகியவற்றின் வழியாக, இறைவன் திருஅவைக்கு வழங்கியுள்ள கோடைக்கு நன்றி கூறுவதாக, இலத்தீன் அமெரிக்கா, மற்றும் கரீபியன் தீவுகளின் இளையோர் இணைந்து, திருத்தந்தைக்கு ஒரு மடலையும், காணொளிச் செய்தியையும் அனுப்பியுள்ளனர்.

2013ம் ஆண்டிலிருந்து இறைவன் வழங்கியுள்ள இந்த ஆசீருக்காக நன்றி நவிலும் அதே வேளையில், எந்த ஒரு சூழலிலும் இறைவனின் நற்செய்தியை எடுத்துச் செல்லும் ஆர்வத்தையும், சக்தியையும், அர்ப்பணத்தையும் இளைய தலைமுறையினர் பெற்றுவருகின்றனர் என்றும், திருத்தந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள இச்செய்தி கூறுகிறது.

தீமையையும், வன்முறையையும் அகற்றி, சுயநலம், பகைமை, சகிப்பற்ற நிலை போன்ற சுவர்களைத் தகர்த்து, புதிய உலகைக் கட்டியெழுப்பும் பயணத்தில், இயேசு தங்களுடன் இணைந்து நடக்கிறார் என்ற உறுதிப்பாட்டுடன் தாங்கள் செயல்படுவதாக, இளையோர் இச்செய்தியில் கூறியுள்ளனர்.

செபத்தாலும், அருள் அடையாளங்களாலும் சக்தி பெற்றவர்களாக, அச்சமின்றி, வறியோர் மீது அன்பு கொண்டவர்களாக, அமைதி, மற்றும் ஒற்றுமையின் தூதர்களாக அவரவர் சமுதாயத்தில் செயல்படுவோம் என்று, இலத்தீன் அமெரிக்க, மற்றும் கரீபியன் இளையோர், இச்செய்தியின் வழியே, திருத்தந்தைக்கு உறுதியளித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2018, 16:52