தேடுதல்

ஆப்ரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஆப்ரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

தன்சானியாவின் 150ம் ஆண்டு நிறைவு - திருத்தந்தையின் செய்தி

தன்சானியா நாட்டில் 150 ஆண்டுகளாக உருவாகியுள்ள வளர்ச்சி,, மனித சக்தியால் மட்டும் உருவானது அல்ல, அது, இறையருளின் உதவியோடு நிகழ்ந்துள்ளது – திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன்சானியா (Tanzania) நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தலத்திருஅவைக்கு, சிறப்புச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

1868ம் ஆண்டு, தன்சானியா நாட்டில், முதல் மறைபரப்பு பணியாளர்கள் காலடி எடுத்துவைத்த பாகமோயோ நகரில், இவ்வாண்டு நவம்பர் 2ம் தேதி முதல், 4ம் தேதி முடிய 150ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இடம்பெறவுள்ளதையடுத்து, திருத்தந்தை இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

1868ம் ஆண்டு விதைக்கப்பட்ட விதை, கடந்த 150 ஆண்டுகளில் நூறு மடங்காக வளர்ந்து, பல மறைமாவட்டங்களை, தற்போது கொண்டுள்ளது என்ற உண்மை, மனித சக்தியால் மட்டும் உருவானது அல்ல, அது, இறையருளின் உதவியோடு நிகழ்ந்துள்ளது என்று, திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

தன்சானியா நாட்டில் பணியாற்றிவரும் அனைத்து இறைப்பணியாளர்கள் மீது, அன்னைமரியா, மற்றும், அனைத்துப் புனிதர்களின் துணையையும், பரிந்துரையையும் வேண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

மேலும், "நீங்கள் இறைவனின் குரலுக்குச் செவிமடுக்க விரும்பினால், உங்கள் பயணத்தைக் துவக்கி, தேடுதலைத் தொடருங்கள். தேடிக்கொண்டிருப்பவர்களுடன் இறைவன் பேசுகிறார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியாயின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2018, 16:38