புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

இஸ்பானிய கத்தோலிக்கருக்கு திருத்தந்தையின் செய்தி

இஸ்பானிய கத்தோலிக்கர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு தொடர்ந்து ஆற்றிவரும் ஒப்பற்ற பணிகளை, அந்நாட்டு தலத்திருஅவை புரிந்து, ஏற்றுக்கொண்டுள்ளது, ஓர் அழகான அம்சம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நீங்கள் மேற்கொண்டுள்ள இந்த ஐந்தாவது சந்திப்பின் வழியே, சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்கி, நம்பிக்கையை விழித்தெழச் செய்துள்ளீர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அனுப்பியுள்ள ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 20, இவ்வியாழன் முதல், 23 வருகிற ஞாயிறு முடிய, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தின் கிரேப்வைன் எனும் நகரில் நடைபெறும் இஸ்பானிய கத்தோலிக்கரின் ஐந்தாவது தேசிய மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இஸ்பானிய கத்தோலிக்கர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு தொடர்ந்து ஆற்றிவரும் ஒப்பற்ற பணிகளை, அந்நாட்டு தலத்திருஅவை புரிந்து, ஏற்றுக்கொண்டுள்ளது, ஓர் அழகான அம்சம் என்று, திருத்தந்தை, தன் காணொளிச் செய்தியில் பாராட்டியுள்ளார்.

புகலிடம் தேடி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லையில் காத்திருக்கும் பலருக்கு, அந்நாட்டின் இஸ்பானிய கத்தோலிக்கர் ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருப்பது, மனதுக்கு நிறைவைத் தருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில், சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்பானிய சமுதாயம், குறிப்பாக, இஸ்பானிய இளையோர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வளர்ச்சிக்கு அளித்து வரும் பங்களிப்பை இன்னும் தொடரவேண்டும் என்று, திருத்தந்தை இச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2018, 15:20