தேடுதல்

திருத்தந்தையுடன் திருப்பீட சமூகத் தொட்புத்துறை தலைவர் பவுலோ ருஃபினி திருத்தந்தையுடன் திருப்பீட சமூகத் தொட்புத்துறை தலைவர் பவுலோ ருஃபினி 

உலக சமூகத்தொடர்பு நாள் – திருத்தந்தையின் மையக்கருத்து

'நாம் யாவரும் ஓருடலில் உறுப்புக்களாக இருக்கிறோம் - இணையதள சமூகத்திலிருந்து, மனிதாபிமான சமூகங்களை நோக்கி' - 2019ம் ஆண்டிற்குரிய சமூகத்தொடர்பு மையக்கருத்து.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி திருஅவையில் சிறப்பிக்கப்படும் 53வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை தேர்வு செய்துள்ள மையக்கருத்தை இச்சனிக்கிழமையன்று வெளிட்டுள்ளது, திருப்பீடம்.

'நாம் யாவரும் ஓருடலில் உறுப்புக்களாக இருக்கிறோம் - இணையதள சமூகத்திலிருந்து, மனிதாபிமான சமூகங்களை நோக்கி' என்பது, 2019ம் ஆண்டிற்குரிய மையக்கருத்தாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மீட்புக்காக போராடவும், நம்பிக்கையின் நற்செய்தியை மக்களுக்குக் கொணரவும், பயணத்தில் பாதுகாப்பை வழங்கவும், தலைமைத் தூதர்களான மிக்கேல், கபிரியேல் மற்றும் இரஃபேல் உதவட்டும் என்ற கருத்துடன் தன் சனிக்கிழமை டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டமபர் 29ம் தேதி, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட தலைமைத் தூதர்களான மிக்கேல், கபிரியேல் மற்றும் இரஃபேல் திருவிழாவையொட்டி டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, 'புனித மிக்கேலே, எமது மீட்புக்காக யாம் போராட உதவியருளும். புனித கபிரியேலே, நம்பிக்கையை வழங்கும் நற்செய்தியை எமக்குக் கொணரும். புனித இரஃபேலே, எங்கள் பயணத்தின்போது பாதுகாத்தருளும்' என, அதில் வேண்டுதல் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2018, 16:43