லித்துவேனிய நினைவிடத்தில் திருத்தந்தை செபம் லித்துவேனிய நினைவிடத்தில் திருத்தந்தை செபம்  

லித்துவேனிய நினைவிடத்தில் திருத்தந்தை செபம்

ஆண்டவரே, லித்துவேனியா, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குவதாக. அனைத்துவிதமான அநீதிகளைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலமாக அந்நாடு இருப்பதாக – திருத்தந்தை செபம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஆண்டவரே, உமது கதறல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இம்மக்களின் எண்ணற்ற பிள்ளைகள் எதிர்கொண்ட துன்பங்களை நினைவுபடுத்தும் இச்சுவர்களுக்குள், உமது கதறல் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றது. சர்வாதிகாரத்தின்மீது தாகம் கொண்டவர்களுக்கு, லித்துவேனியர்களும், ஏனைய நாட்டினரும் தங்கள் சதைகளை விலையாகக் கொடுத்துள்ளனர். இந்த நினைவிடத்தில், ஆண்டவரே, உமது கதறல் எங்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதாக. ஆண்டவரே, உமது கதறல், எங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் அனுபவங்களையும் துன்பங்களையும் மறக்கச் செய்யும், தொடர் சோதனையில் இருத்தும் ஆன்மீக நோயினின்று எங்களை விடுவித்தருளும். ஆண்டவரே, உமது கதறலிலும், கடந்த காலத்தில் கடும் துன்பங்களை அனுபவித்த அனைவரிலும் இக்கால மற்றும் வருங்காலத்தை உறுதியாக கட்டியெழுப்பும் துணிச்சலைப் பெறுவோமாக. இக்கால நவீன நாகரீக வாழ்வால் நாங்கள் உறிஞ்சப்படாதிருக்கவும், நீர் அளித்துள்ள மாண்பை எந்த மனிதரிடமிருந்தும் எடுத்துவிடாதிருக்கவும் அல்லது அதைக் குறைக்காதிருக்கவும், ஆண்டவரே, உமது கதறல் உதவுவதாக. அனைத்து மனிதரின், குறிப்பாக, மிகவும் பாதுகாப்பற்றவர்கள் மற்றும் நலிந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, படைப்பாற்றல்கொண்ட முயற்சிகளை, லித்துவேனியா ஊக்குவிப்பதாக. ஒப்புரவு மற்றும் பன்மைத்தன்மையில் நல்லிணக்க வழியை அனைவருக்கும் காட்டும் ஆசிரியராக லித்துவேனியா விளங்குவதாக. இந்நாள்களில் விண்ணைநோக்கிக் கதறும் அனைவரின் குரலுக்குச் செவிமடுப்பவர்களாக இருப்பதற்கு வரம் அருளும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2018, 16:44