தாலின் விடுதலை வளாகத்தில் திருப்பலி தாலின் விடுதலை வளாகத்தில் திருப்பலி 

தாலின் விடுதலை வளாகத்தில் திருப்பலி

லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கான எனது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்யும் இவ்வேளையில், எஸ்டோனிய அப்போஸ்தலிக்க நிர்வாகி முதல் அனைவருக்கும் எனது நன்றி - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

புனிதர்கள் பேதுரு, பவுல் பேராலய நிகழ்வை நிறைவு செய்து, அங்கிருந்து 2.8 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று, தாலின் விடுதலை வளாகத்தை அடைந்த திருத்தந்தை, அவ்வளாகத்திற்குள் திறந்த காரில் அங்கு குழுமியிருந்த விசுவாசிகள் மத்தியில் வலம் வந்தார். உள்ளூர் நேரம் மாலை 4.30 மணி. அதாவது, இந்திய இலங்கை நேரம், 7 மணிக்கு, விடுதலை வளாகத்தில் திருப்பலியை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலியின் இறுதியில், லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கான எனது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்யும் இவ்வேளையில், எஸ்டோனிய அப்போஸ்தலிக்க நிர்வாகி முதல் அனைவருக்கும் எனது நன்றி சொல்கிறேன், சிறிய மந்தை பெரிய இதயத்துடன் வெளிப்படுத்திய வரவேற்பிற்கு நன்றி. இக்குடியரசின் அரசுத்தலைவருக்கும், ஏனைய நாட்டின் அதிகாரிகளுக்கும் நன்றி, கிறிஸ்தவ சகோதரர் சகோதரிகள், குறிப்பாக எஸ்டோனியாவிலும், லாத்வியாவிலும் இருக்கின்ற லூத்தரன் சபை சகோதரர் சகோதரிகளுக்கு நன்றி. ஒன்றிப்பு பாதையை நோக்கி நம் ஆண்டவர் தொடர்ந்து வழிநடத்துவாராக. அனைவருக்கும் நன்றி எனச் சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலிக்குப் பின்னர், தாலின் பன்னாட்டு விமான நிலையம் சென்று உரோம் நகருக்குப் புறப்படுவது, இச்செவ்வாய்க்கிழமையின் கடைசி பயண திட்டமாகும். இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பால்டிக் நாடுகளில் மேற்கொண்ட 25வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2018, 16:40