தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையில் சிரியாவுக்காக செபிக்க அழைக்கும் திருத்தந்தை மூவேளை செப உரையில் சிரியாவுக்காக செபிக்க அழைக்கும் திருத்தந்தை  (ANSA)

மோதல்களைத் தவிர்க்கும் பேச்சுவார்த்தைகள்

இன்றைய நவீன இளைய சமுதாயம், நற்செய்தியில் நிலைத்திருந்து, செபத்தில் நம்பிக்கை வைத்துச் செயல்பட, ஸ்லோவாக்கியாவின் புதிய அருளாளர் உதவுவாராக

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிரியாவில் இன்னும் போர்ச்சூழல் தொடர்ந்து வருவதும், மனித குல பேரழிவு குறித்த செய்திகள் அங்கிருந்து வந்தவண்ணம் இருப்பதும், பெரும் வேதனையைத் தருவதாக, இஞ்ஞாயிறன்று, தன் நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 Idlib மாவட்டத்தில் இடம்பெற உள்ள உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு, அனைத்துலக சமூகம், அரசியல் திறமை, பேச்சுவார்த்தைகள், உரையாடல், மனிதாபாபிமான சட்டங்கள் மதிப்பு, பொதுமக்கள் உயிர் பாதுகாப்பு போன்றவைகளை பயன்படுத்தவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், கடந்த சனிக்கிழமையன்று ஸ்லோவாக்கியா நாட்டில்  Košice நகரில், இறையடியார் Anna Kolesárová அவர்கள், அருளாளராக அறிவிக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மாண்பு மற்றும் கற்பை பாதுகாப்பதற்காக தன் உயிரையே கையளித்த இந்த மறைசாட்சி, இத்தாலியின் புனிதை மரிய கொரட்டியை ஒத்தவர் எனவும் கூறி, இன்றைய இளம் கிறிஸ்தவர்களுக்கு இப்புதிய அருளாளர் Anna Kolesárová  அவர்கள் உதவுவாராக எனவும் உரைத்தார்.

03 September 2018, 16:39