தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர் Nunzio Galantino திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர் Nunzio Galantino 

"வார்த்தைகளை வாழுதல்" - புதிய நூலுக்கு அணிந்துரை

அமைதி, செவிமடுத்தல், பேசுதல் என்ற வரிசையில் சொற்கள் மேற்கொள்ளும் பயணமே பயனுள்ளதாக அமையும் – திருத்தந்தையின் அணிந்துரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சொற்கள் எதையும் சாராமல், பட்டும் படாமல் இருப்பதில்லை, மாறாக, அவை, மக்களின் ஒட்டுமொத்த நினைவுகளின் வெளிப்பாடாக, கலாச்சார மற்றும் ஆன்மீக விழுமியங்களைத் தாங்கி வருகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூலின் அணிந்துரையில் கூறியுள்ளார்.

இத்தாலிய மொழியில் வெளிவரும் "Avvenire" என்ற நாளிதழ், "வார்த்தைகளை வாழுதல்: இருப்பின் சொல்லகராதி" என்ற தலைப்பில், செப்டம்பர் 12, இப்புதனன்று வெளியிட்ட ஒரு நூலுக்கு, திருத்தந்தை வழங்கியுள்ள அணிந்துரை, 'சொற்கள் எதையும் சாராமல் இருப்பதில்லை' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

வாழ்வைப் பகிர்வதுடன் தொடர்பு கொண்டுள்ள வார்த்தைகளே பயனுள்ள வார்த்தைகள் என்றும், ஐயங்கள், அச்சங்கள், கேள்விகள், எதிர்ப்புக்கள் அனைத்தையும் துணிவுடன் எதிர்கொள்ளும் வார்த்தைகளே பயனுள்ள வார்த்தைகள் என்றும் திருத்தந்தை தன் அணிந்துரையில் கூறியுள்ளார்.

ஒவ்வொரு உயிரும், கருவில் உருவாகும்போது, அமைதி காத்து, பிறர் கூறுவதைச் செவிமடுத்து, பின்னரே பேசத் துவங்குகிறது என்பதை தன் அணிந்துரையில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, அமைதி, செவிமடுத்தல், பேசுதல் என்ற வரிசையில் சொற்கள் மேற்கொள்ளும் பயணத்தை அனைவரும் உணரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இத்தாலிய ஆயர் பேரவையின் பொதுச் செயலரான ஆயர் Nunzio Galantino அவர்கள் எழுதியுள்ள இந்நூல், செப்டம்பர் 12ம் தேதி வெளியானது

12 September 2018, 15:20