தேடுதல்

பாரியில் மதத்தலைவர்கள் சந்திப்புக்குப்பின் புறாவைப் பறக்கவிடுகிறார் திருத்தந்தை பாரியில் மதத்தலைவர்கள் சந்திப்புக்குப்பின் புறாவைப் பறக்கவிடுகிறார் திருத்தந்தை 

உலக அமைதி நாளுக்கு டுவிட்டர் செய்தி

1982ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் தேதி, உலக அமைதி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 21, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக அமைதி நாளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அமைதி என்பது ஒரு தேர்வு. அது திணிக்க முடியாதது மற்றும், அது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட முடியாதது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் பதிவாகியுள்ளன.

போர்களும், வன்முறைகளும் நிறுத்தப்பட்டு, நாடுகள் மற்றும் மக்கள் மத்தியில் அமைதி பற்றிய கருத்தியல்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, 1981ம் ஆண்டில் ஐ.நா.பொது அவை, உலக அமைதி நாளை உருவாக்கியது.

“அமைதியைக் கொண்டிருக்கும் உரிமை – உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை 70” என்ற தலைப்பில், 2018ம் ஆண்டின் உலக அமைதி நாள் கடைப்பிடிக்கப்பட்டது

இந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், “மனித சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் இன்றியமையாத மாண்பு, சம உரிமைகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கையின் கூறுகளை, எல்லா நாடுகளும், அனைத்து மக்களும் வாழ்வதற்குத் தகுந்த காலம் இதுவே என்றும், இந்த ஆண்டு, வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிக்கையின் எழுபதாம் ஆண்டு நிறைவு என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2018, 15:02