திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

யூத பெருவிழாவுக்கு திருத்தந்தை வாழ்த்து

திருத்தந்தை : நட்பின் பிணைப்பை உறுதிப்படுத்தவும், கலந்துரையாடல்களை ஊக்குவிக்கவும் சமய விழாக்கள் உதவட்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

'கனிவும் மனத்தாழ்மையும், மக்களோடு நெருக்கமும், இரக்கமும் சாந்தமும் கொண்டிருப்பவர் இயேசு' என இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், யூத சமூகத்தின் Rosh Ha Shana பெருவிழாவையொட்டி, உரோம் நகர் வாழ் யூத சமூகத்திற்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் அனுப்பியுள்ள பெருவிழா வாழ்த்துச் செய்தியில், இரு மதங்களுக்கும் இடையே நிலவும் நட்பின் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தவும், இரு தரப்பினரிடையே உரையாடலை, தொடர்ந்து ஊக்குவிக்கவும், இறை அருளை வேண்டுவதாகவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரின் தலைமை யூதக் குரு Riccardo di Segni அவர்களுக்கும், உரோம் யூத சமூகத்திற்கும் திருத்தந்தை அனுப்பியுள்ள இந்த யூத புத்தாண்டு வாழ்த்துச் செய்தி, இரு மதங்களிடையே நல்லுறவை வளர்க்கும் பாலமாக இத்தகைய கொண்டாட்டங்கள் இருக்கட்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2018, 16:20