திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் இணையதள பக்கம் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் இணையதள பக்கம் 

திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,692

"அன்பு காட்டும் நன்மைத்தனம், ஒருபோதும் தன்னை மற்றவர் மீது திணிக்காது. அது ஒருவரின் விருப்பத் தெரிவு" - திருத்தந்தையின் டுவிட்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"அன்பு காட்டும் நன்மைத்தனம், ஒருபோதும் தன்னை மற்றவர் மீது திணிக்காது. அது ஒருவரின் விருப்பத் தெரிவு" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, செப்டம்பர் 19, இப்புதனன்று வெளியாயின.

இப்புதன் திருப்பலியில் வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில், திருத்தூதர் பவுல், கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தின் 13ம் பிரிவில், அன்பைக் குறித்து கூறும் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி அமைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

செப்டம்பர் 19, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,692 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 78 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2018, 14:41