தேடுதல்

மோட்டார் சைக்கிள் வீரர்களுடன் திருத்தந்தை மோட்டார் சைக்கிள் வீரர்களுடன் திருத்தந்தை 

விளையாட்டு நடவடிக்கைகளின் மதிப்பீடுகளை பரப்புக‌

விளையாட்டு என்பது, இளைய சமுதாயத்திற்கு மதிப்பீடுகளை வழங்கவல்ல கருவி என்பதை உணர்ந்து, வாழ்வை உணர்வுப்பூர்வமானதாக எடுத்துச் செல்வோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

செப்டம்பர் 05, இப்புதன் மறைக்கல்வி உரைக்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கம் சென்று, அங்கு குழுமியிருந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை சந்தித்து சிறு உரை ஒன்றும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சான் மரினோ நாட்டிலும், இத்தாலியின் ரிமினி, ரிவியேரோ பகுதியிலும் இடம்பெறும் போட்டிகளில் கலந்துகொள்ளும் மோட்டார் சைக்கிள் வீரர்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். விளையாட்டை ஒட்டிய நடவடிக்கைகள் இளைய சமுதாயத்திற்கு கல்வியின் கருவியாக உள்ளன. விளையாட்டின் மதிப்பீடுகளைப் பரப்புங்கள். அதன் வழியாக, மேலும் நீதியான ஓர் உலகை உருவாக்க இயலும். இன்று உங்கள் குழுத்தலைவர் வழங்கிய வரவேற்புரையிலிருந்து இரண்டு வாக்கியங்களை எடுத்து உங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒன்று 'உணர்வுப்பூர்வமான செயல்பாடு' இன்னொன்று, 'வாழ்வின் வெற்றி வீரர்'. வாழ்வை சுமையாக நோக்காமல், அதை உணர்வுப் பூர்வமான ஒரு செயல்பாடாக நோக்குங்கள். இந்த இரண்டையும் வாழ்வில் கொண்டு செயல்படுங்கள். உங்கள் மீது இறையாசீரை வேண்டுகிறேன்.

இவ்வாறு மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களுக்கு உரை வழங்கிய திருத்தந்தை, அவர்களுக்கு தன் ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2018, 12:55