திருத்தந்தைக்கு பரிசாக அளிக்கப்பட்ட வெஸ்பா ஸ்கூட்டர் திருத்தந்தைக்கு பரிசாக அளிக்கப்பட்ட வெஸ்பா ஸ்கூட்டர் 

பிறரன்பு பணிகளுக்கு உதவ ஸ்கூட்டர் பரிசளிப்பு

திருத்தந்தையின் பணிகளுக்கு தங்கள் பங்களிப்பாக, ஸ்கூட்டர் ஒன்றை பரிசளித்ததுடன், அவரின் மூவேளை செப நிகழ்விலும் பங்கு கொண்ட வெஸ்பா ஸ்கூட்டர் கூட்டமைப்பினர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெஸ்பா ஸ்கூட்டர் வண்டி ஓட்டுனர்களின் உலக கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த கூட்டமைப்பின் 2வது உலக சந்திப்பு, கடந்த வெள்ளி முதல் ஞாயிறு வரை, மூன்று நாட்களுக்கு இடம்பெற்றதையொட்டி, திருத்தந்தையை சந்தித்த பிரதிநிதிகள், 71ம் ஆண்டின்  வடிவமைப்பைக் கொண்ட வெஸ்பா ஸ்கூட்டர் ஒன்றை திருத்தந்தைக்கு பரிசாக அளித்தனர்.

இந்த ஸ்கூட்டரின் பதிவு எண்ணாக BF362918 என்பதை அவ்வண்டியில் பொருத்தியுள்ள இவர்கள், பி.எஃப் என்பதற்கு பெர்கோலியோ பிரான்சிஸ் எனவும் 36 என்பது திருத்தந்தைந்தையின் பிறந்த ஆண்டை குறிப்பதாகவும், 2,9,18 என்பது திருத்தந்தைக்கு இந்த வண்டி பரிசாக அளிக்கப்பட்ட நாளைக் குறிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வெஸ்பா கூட்டமைப்பின் 600 பேர் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்து திருத்தந்தையின் மூவேளை செப நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2018, 16:34