இளையோருடன் திருத்தந்தை இளையோருடன் திருத்தந்தை 

இளையோர் வரங்களாக கருதப்படவேண்டும் – திருத்தந்தை

"அன்புள்ள ஆயரே, 100 இளையோர் எழுதுகின்றனர், ஆயர்கள் பதிலளிக்கின்றனர்" என்ற தலைப்பில் Marco Pappalardo என்ற இளம் எழுத்தாளரால் எழுதப்பட்டுள்ள ஒரு நூலுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் முன்னுரை வழங்கியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலக சமுதாயத்திற்கும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு வரமாக, இளையோர் நோக்கப்படாமல், அவர்களை ஒரு பிரச்சனையாக நோக்கும் நிலை வளர்ந்துவருவதற்கான காரணங்கள் ஆராயப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

"அன்புள்ள ஆயரே, 100 இளையோர் எழுதுகின்றனர், ஆயர்கள் பதிலளிக்கின்றனர்" என்ற தலைப்பில் Marco Pappalardo என்ற இளம் எழுத்தாளரால் எழுதப்பட்டுள்ள ஒரு நூலுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள முன்னுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்றைய இளையோர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர், அரசியலில் ஆர்வமற்றுள்ளனர், மத வழிபாடுகளில் பங்கேற்பதில்லை என்ற பல்வேறு எதார்த்தங்களுக்கு, திருத்தந்தை, தன் முன்னுரையில் காரணங்களை ஆய்வு செய்ய முனைந்துள்ளார்.

சமுதாய, மற்றும், ஆன்மீக வாழ்விலிருந்து இளையோர் ஒதுங்கியிருப்பதை தவிர்க்கவேண்டுமெனில், முதலில் அவர்களது குரல்களுக்கு செவிமடுக்கவும், அவர்கள் கருத்துக்களை ஏற்று, அவர்களை முன்னிறுத்தவும், திருஅவையும், சமுதாயமும் முன்வரவேண்டும் என்று திருத்தந்தை தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ சமுதாயத்திற்கும், இளைய தலைமுறைக்கும் இடையே இடம்பெறவேண்டிய கருத்துக் பரிமாற்றங்களின் முக்கியத்துவம் குறித்தும் இம்முன்னுரையில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை அதிகாரிகள் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்திடம் விளங்கவேண்டிய நம்பத்தகுந்த சாட்சிய வாழ்வின் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2018, 17:01