தேடுதல்

அல்பேனியா நாட்டு அரசுத்தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அல்பேனியா நாட்டு அரசுத்தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

அல்பேனியாவில் இளையோரிடையே சிறப்புப் பணிக்கு நன்றி

அல்பேனியாவில் நிலவும் சமயச்சுதந்திரம், அமைதியில் வாழ்தல், குழுக்களிடையே கலந்துரையாடல் ஊக்குவிப்பு, இளையோரிடையே சிறப்புப் பணி ஆகியவை திருப்பீடத்தில் விவாதிக்கப்பட்டன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 17, இத்திங்களன்று காலை, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார், அல்பேனியா நாட்டு அரசுத்தலைவர் Ilir Meta.

அரசுத்தலைவர் Ilir Meta அவர்கள் திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பிற்குப் பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்புகளின்போது, திருப்பீடத்திற்கும் அல்பேனியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், அல்பேனிய சமூகத்திற்கு, குறிப்பாக, இளைய சமுதாயத்திற்கு, திருப்பீடம் ஆற்றிவரும் பணிகள் குறித்தும் உரையாடல் இடம்பெற்றது.

மத சுதந்திரத்தை ஊக்குவித்தல், அமைதியில் ஒன்றிணைந்து வாழ்தல், மதங்களிடையே, மற்றும், கலாச்சாரங்களிடையே உரையாடல்களை ஊக்குவித்தல் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2018, 16:34