தேடுதல்

டப்ளின் புனித மரியா பேராலய சந்திப்பு டப்ளின் புனித மரியா பேராலய சந்திப்பு 

டப்ளினில் பொன்விழா தம்பதியரின் வரவேற்பு

திருமணமும் குடும்ப வாழ்வும் சவால் நிறைந்தது, ஆனால், வாழ்வின் கடினமான நேரங்களில் செபம் உதவியுள்ளது, என திருத்தந்தையிடம் கூறினர் ஒரு வயதான தம்பதியர்.

மேரி தெரேசா - வத்திக்கான்

இங்கு இளையோர் சந்திப்பில், வயதான நாங்கள் முதலில் பேசுவது குறித்து, திருத்தந்தையே, தாங்கள் வியப்படையலாம். நாங்கள் ஐம்பது ஆண்டுகளாக திருமண வாழ்வை வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு வாழ்வு எளிதாக இல்லை. அயர்லாந்து மிக ஏழ்மையாக இருந்தது. பலர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம். இக்காலத்தில் இருக்கும் பல ஆதரவுகள் எங்களுக்கு அக்காலத்தில் இல்லை. இந்தக் கூட்டத்தில் இளம் தம்பதியருக்கு நாங்கள் ஒன்றைச் சொல்ல விரும்புகிறோம். குடும்ப வாழ்வு சவால் நிறைந்தது. ஆனால் வாழத் தகுதியுடையது. குடும்பம் என்பது அன்பைப் பற்றியது. குடும்பத்தில் அன்பு எப்போதும் எளிதாக இருக்காது, ஆனால் அந்த அன்பு வாழ்வை வளப்படுத்தும். தம்பதியரின் அன்பைப் பற்றியும், பெற்றோர், பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பு பற்றியும், குடும்பங்கள் சமூகங்களை வளமைப்படுத்தும் நன்மைத்தனம் பற்றியும் நினைத்துப் பார்க்கிறோம். எங்கள் பிள்ளைகள் மற்றும் எங்கள் பேரக்குழந்தைகளிடமிருந்து பெற்ற அன்பை நினைத்துப் பார்க்கிறோம். குடும்ப வாழ்வு  எங்களுக்கு எளிதாக இல்லை. எனினும் செபத்தால் சிறப்பான முறையில் நாங்கள் ஆதரவளிக்கப்பட்டோம். வாழ்வின் கடினமான நேரங்களில் செபம் உதவியுள்ளது. திருமணமும் குடும்ப வாழ்வும் சவால் நிறைந்தது. ஆனால் இயேசு மீது நாம் கொண்டிருக்கும் விசுவாசம் அதற்கு உதவும், நம் வாழ்வை மிக மதிப்புமிக்கதாய் அமைக்கும். இவ்வாறு அந்த வயதான தம்பதியர், அந்த சந்திப்பில் கூறினார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2018, 15:29