சோதனை பதிப்பு

Cerca

Vatican News
அயர்லாந்து ஆயர்களுக்கு திருத்தந்தை உரையாற்றுகிறார் அயர்லாந்து ஆயர்களுக்கு திருத்தந்தை உரையாற்றுகிறார்  (ANSA)

அயர்லாந்து ஆயர்களுடன் திருத்தந்தையின் இறுதி சந்திப்பு

நம்பிக்கை தளராமல் முன்னேறிச் செல்லும் அயர்லாந்து தலத்திருஅவைக்கு, அந்நாட்டு ஆயர்கள் வழியே, தன் நன்றியையும், பாராட்டையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் அயர்லாந்து திருஅவைக்கு தன் நன்றியைத் தெரிவிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்.

தன் அயர்லாந்து திருத்தூதுப் பயணத்தின் இறுதி நிகழ்வாக, டப்ளின் நகரின் தொமினிக்கன் துறவு சகோதரிகள் இல்லத்தில், அந்நாட்டு ஆயர்களைச் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உதவி தேவைப்படும் வறியோருக்கும், வீடற்றோருக்கும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கும், அயர்லாந்து திருஅவை ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டுவதாகக் கூறினார்.

சிலரது தவறான பாலியல் நடவடிக்கைகளால் மனம் தளர்ந்து போயிருக்கும் அருள் பணியாளர்களுக்கு, ஊக்கத்தையும், புது நம்பிக்கையையும் வழங்கிவரும் ஆயர்கள், அப்பணியில் தொடரவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

கடந்த காலத் தவறுகளை ஏற்று, சிறார்களை பாதுகாக்க எடுத்துவரும் நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாகத் தொடரவேண்டும் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் குடும்பங்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும் ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார்

27 August 2018, 16:32