அயர்லாந்திலிருந்து திரும்பிய விமானப்பயணத்தில் செய்தியாளர்களுடன் பேசும் திருத்தந்தை பிரான்சிஸ் அயர்லாந்திலிருந்து திரும்பிய விமானப்பயணத்தில் செய்தியாளர்களுடன் பேசும் திருத்தந்தை பிரான்சிஸ் 

அயர்லாந்திலிருந்து திரும்பிய விமானப்பயணத்தில் திருத்தந்தை

குடியேற்றதாரர்கள், மற்றும் புலம் பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ளும் நாடுகள், அவர்களை சமுதாயத்தின் ஓர் அங்கமாக உணரவைக்கவேண்டியது அவசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

புலம் பெயர்ந்தோராக நாட்டிற்குள் அனுமதிக்கப்படுபவர்கள், அந்நாட்டின் ஓர் அங்கமாக மாறுவதற்குத் தேவையான ஊக்கம் வழங்கப்படவேண்டும் என்ற அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்தார்.

அயர்லாந்தில் குடும்பங்களின் உலக மாநாட்டை நிறைவு செய்து திரும்பும் வழியில் விமானத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை, குடியேற்றதாரர்கள், மற்றும் புலம் பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ளும் நாடுகள், அவர்களை சமுதாயத்தின் ஓர் அங்கமாக உணரவைக்கவேண்டியது அவசியம் என்று கூறினார்.

அயர்லாந்தில், திருமணமாகாமல் குழந்தைகளைப் பெற்ற இளம் அன்னையரின் குழந்தைகள், அவ்வன்னையரின் ஒப்புதலின்றி, தத்து கொடுக்கப்பட்டது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை, மீண்டுமொருமுறை இந்த கேள்வி பதில் நேரத்தில் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கருக்கலைத்தல் குறித்தும் தன் கருத்துக்களைப் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இதை, ஒரு மதப்பிரச்சனையாகப் பார்க்காமல், சமூகப்பிரச்சனையாகப் பார்க்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒரே பாலின ஈர்ப்புகொண்டோரைக் குறித்த கேள்விக்கும் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விடயத்தில், பெற்றோர், தங்கள் குழந்தைகளின் இத்தகையப் பிரச்சனைகளுக்கு செவிமடுத்து, அவர்களின் கருத்துக்களைப் புரிந்துகொள்ள முன்வரவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

தன் கேள்வி பதில் பகுதியின் இறுதியில், அயர்லாந்து மக்களின் ஆழமான விசுவாசம் குறித்து, தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2018, 16:31