தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

கிறிஸ்தவ வாழ்வு, இறைத்தந்தைக்கு நன்றியுணர்வுடன் பதிலுரைப்பது

கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏட்டில் மரண தண்டனை குறித்த மாற்றத்திற்கு ஆயர்கள் வரவேற்பு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ வாழ்வு என்பது, எல்லாவற்றுக்கும் மேலாக, பெருந்தன்மை நிறைந்த இறைத்தந்தைக்கு நன்றியுணர்வுடன் பதிலுரைப்பதாகும் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், ஆகஸ்ட் 03, இவ்வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றுள்ளது.

மேலும், மரண தண்டனை குறித்து, கத்தோலிக்க மறைக்கல்வி ஏட்டில் மாற்றம் செய்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துள்ள தீர்மானம், மகிழ்வையும், திருப்தியையும் அளிக்கின்றது என்று, சான் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றுதல், மனிதரின் மீறமுடியாத மாண்பின் மீது தாக்குதல் நடத்துவதாகும் என்பதால், இத்தண்டனை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று, மரணதண்டனை குறித்த மறைக்கல்வி எண் 2267ல், மாற்றம் செய்திருப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது, சான் எஜிதியோ அமைப்பு.

இந்த மாற்றம் குறித்த அறிக்கையை, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் Luis Francisco Ladaria அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்டார்.  

உரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சான் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, உலகெங்கும் மரண தண்டனை இரத்து செய்யப்படுவதற்கு அழைப்பு விடுத்து வருகிறது.

மேலும், இலத்தீன் அமெரிக்க ஆயர்களும், திருத்தந்தையின் இத்தீர்மானத்தை வரவேற்று, அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2018, 15:29