பால்டிக் நாடுகளின் திருத்தூதுப் பயண இலச்சினைகள் பால்டிக் நாடுகளின் திருத்தூதுப் பயண இலச்சினைகள் 

எஸ்டோனிய திருத்தூதுப் பயணத்திற்காக நோன்புடன் செபம்

கத்தோலிக்கர் மட்டுமல்லாமல், கத்தோலிக்கர் அல்லாதவரும், குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் திருஅவையைவிட்டு விலகிச் சென்றவர்களும், திருத்தந்தையின் எஸ்டோனிய பயண நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு ஆயர் அழைப்பு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கடவுளின் அன்பை ஆர்வமாய் ஏற்றுக்கொள்வதன் வழியாக, நாம் உலகையும், வரலாற்றையும் மாற்றுகிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், இவ்வெள்ளிக்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 25ம் தேதி எஸ்டோனியா நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்திற்கு ஓர் ஆன்மீகத் தயாரிப்பாக, உண்ணா நோன்பிருந்து செபிக்குமாறு, அந்நாட்டு ஆயர் ஒருவர், விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள, எஸ்டோனியத் தலைநகர் Tallinn அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர்   Philppe Jourdan அவர்கள், இத்திருத்தூதுப் பயணத்திற்குத் தயாரிப்பாக, குறைந்தது ஒருநாள் நோன்பிருந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

செப்டம்பர் முதல் நாள் சனிக்கிழமையன்று நோன்பிருந்து செபிக்குமாறும்,  கடவுள் நம் செபங்களுக்குச் செவிமடுத்து, அதிக ஆசிரைப் பொழிவார் என்றும் கூறியுள்ளார், ஆயர் Jourdan. பனிமய அன்னை விழா, மரியின் விண்ணேற்பு விழா, அரசியான புனித கன்னி மரியின் விழா போன்ற முக்கிய விழாக்களை, ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பிக்கின்றோம், குறிப்பாக, ஆகஸ்ட் 25ம் தேதி Viru-Nigulaவிலுள்ள அன்னை மரியின் ஆலயத்திற்குத் திருப்பயணம் மேற்கொள்கின்றோம் என்பதையும் சுட்டிக்காட்டி, திருத்தூதுப் பயணத்திற்காக, செபமாலை செபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார், ஆயர் Jourdan.

வருகிற செப்டம்பர் 22,23,24 ஆகிய நாள்களில் லித்துவேனியா, லாத்வியா நாடுகளுக்குச் செல்லும் திருத்தந்தை, 25ம் தேதி எஸ்டோனியா செல்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2018, 15:31