தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

"விண்ணரசு, சக்திகொண்ட சிறு விதை" - திருத்தந்தையின் டுவிட்டர்

"விண்ணரசு, ஒரு சிறு விதையின் சக்தியுடன், மர்மமான, வியக்கத்தக்க வழியில் உலகெங்கும் வளர்கிறது" – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"விண்ணரசு, ஒரு சிறு விதையின் சக்தியுடன், மர்மமான, வியக்கத்தக்க வழியில் உலகெங்கும் வளர்கிறது" என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், @pontifex என்ற தன் டுவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 9, இவ்வியாழனன்று பதிவு செய்துள்ளார்.

12-12-12 என்ற சிறப்பான எண்கள் கொண்ட நாளன்று, அதாவது, 2012ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி, அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய 16ம் பெனடிக்ட் அவர்களால் டுவிட்டர் செய்திகள் துவக்கப்பட்டன.

'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் டுவிட்டர் செய்திகளைத் துவக்கினார்.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஆகஸ்ட் 09, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.648 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 77 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 579 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 57 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

09 August 2018, 14:58