தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

உயிர்த்த கிறிஸ்துவின் நிலைவாழ்வு – திருத்தந்தையின் டுவிட்டர்

"உயிர்த்த கிறிஸ்து, நிலைவாழ்வின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார்" என்ற சொற்கள், திருத்தந்தை புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"மரணமே அனைத்திற்கும் இறுதி என்ற எண்ணத்தில் நம்மை நிலைநிறுத்த தீமை முயல்கிறது. ஆனால், உயிர்த்த கிறிஸ்து, நிலைவாழ்வின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 8, இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மேலும், இத்தாலியின் பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்து, உரோம் நகரில் கூடிவரும் 70,000த்திற்கும் அதிகமான இளையோரை, ஆகஸ்ட் 11, சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, சிர்கோ மாஸ்ஸிமோ என்ற திடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து உரையாடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு புகழ்பெற்ற பாடகர்கள், நடனக் கலைஞர்கள் இணைந்து நடத்தும் பக்திப்பாடல்கள், நடனங்கள் நிறைந்த மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரைச் சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தருவதோடு, மாலை செப வழிபாட்டிலும் கலந்துகொள்கிறார்.

ஆகஸ்ட் 12, ஞாயிறு காலை 9.30 மணியளவில், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் குவால்தியேரோ பஸ்ஸெத்தி (Gualtiero Bassetti) அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்ளும் இளையோரை, திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை சந்திக்கிறார்.

இளையோரை வாழ்த்தியவண்ணம் வளாகத்தை வலம்வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லொரேத்தோ மரியன்னை திரு உருவத்தையும், இளையோர் உலக நாள் சிலுவையையும் அர்ச்சித்தபின், அவர்களுக்கு நண்பகல் மூவேளை செப உரையை வழங்குகிறார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2018, 14:45