ஆகஸ்ட் 1, மறைக்கல்வி உரையின் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகஸ்ட் 1, மறைக்கல்வி உரையின் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

பிறரைப் பேணுவதன் வழியே, புனிதத்தில் வாழ அழைக்கும் திருத்தந்தை

ஜூலை 31, இச்செவ்வாயன்று, லொயோலாவின் புனித இக்னேசியஸ் திருநாளை, இயேசு சபை தலைமை இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டாடினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் உள்ள அனைவருக்கும், பிறரைப் பேணிக்காப்பதன் வழியே, புனிதத்தில் வாழும் பொறுப்பு உள்ளது" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில், ஆகஸ்ட் 1, இப்புதனன்று பதிவு செய்துள்ளார்.

மேலும், ஒரு மாத கோடை விடுமுறைக்குப் பின்னர், இப்புதன் காலை 9.30 மணியளவில், அருளாளர் ஆறாம் பால் அரங்கத்தில், தன் மறைக்கல்வி உரையை மீண்டும் துவக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் மறைக்கல்வி உரைக்கு முன்னதாக, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இயேசு சபை துறவுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள 29 இளையோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் ஆறாம் பால் அரங்கத்தின் ஒரு புறம் அமைந்திருந்த அறையில் சந்தித்தார்.

இதற்கிடையே, ஜூலை 31, இச்செவ்வாயன்று, லொயோலாவின் புனித இக்னேசியஸ் திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, உரோம் நகரில் உள்ள இயேசு சபை தலைமை இல்லத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்றார் என்று, தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2018, 15:33