தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் உரை திருத்தந்தை பிரான்சிஸ் உரை  (AFP or licensors)

உலகாயுதப் போக்கா? முடிவற்ற வாழ்விற்கான பயணமா?

உலகாயுதப்போக்குகளை கைவிட்டு, இயேசுவைக் குறித்த தியானத்தை மேற்கொள்வோம்.- திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகப் பொருட்களின் மீதான பற்றைக் கைவிட்டு, இயேசுவைக் குறித்து தியானிப்பதில் நம் கவனத்தைச் செலுத்துவோம் என்ற விண்ணப்பத்தை, இத்திங்களன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'உலகப் பொருட்களைக் கைவிட்டு, இயேசுவைக் குறித்து ஆழ்ந்து தியானிப்பதற்கு, இயேசுவின் சீடர்களின் தபோர் மலை அனுபவம் நமக்கு அழைப்பு விடுக்கிறது' என்கிறது திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி, 'வானுலக வாழ்விற்கான நம் முன்பதிவு திருநற்கருணையேயாகும்; முடிவற்ற வாழ்விற்கான நம் பயணத்தில் இயேசு நம்மை வழிநடத்திச் செல்கிறார்' என்பதாக இருந்தது.

06 August 2018, 15:39