தேடுதல்

மூவேளை செப உரையின்போது கேரளாவுக்காக செபித்தார் திருத்தந்தை மூவேளை செப உரையின்போது கேரளாவுக்காக செபித்தார் திருத்தந்தை 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை செபம்

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களோடு இணைந்து, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கேரளாவில், கனமழை, நிலச்சரிவுகள், வெள்ளம் ஆகியவற்றால் பலியாகியுள்ள, பாதிக்கப்பட்டுள்ள மற்றும் காணாமல் போயுள்ள எண்ணற்ற மக்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என்று, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இடர்துடைப்புப் பணிகளை முன்னின்று ஆற்றும் கேரளத் திருஅவைக்கு நம் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்போம் எனவும், இந்த நம் சகோதரர், சகோதரிகள், நம் ஒருமைப்பாட்டுணர்வாலும், உலகளாவிய சமுதாயத்தின் தெளிவான உதவிகளாலும் ஆதரவளிக்கப்படுவார்கள் என்ற தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பேரிடரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் செபிப்போம் என்று சொல்லி, வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களோடு இணைந்து, அருள்நிறைந்த மரியே என்ற செபத்தை செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2018, 13:33