இந்தோனேசியா நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி இந்தோனேசியா நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி 

இந்தோனேசிய நிலநடுக்கம் - திருத்தந்தையின் தந்தி

இந்தோனேசியாவின் லொம்போக் தீவில், இஞ்ஞாயிறு, 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய அனுதாபத் தந்தி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் திருத்தந்தையின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வண்ணம், அந்நாட்டிற்கு, திருப்பீடத்திலிருந்து செய்தியொன்று அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில், இந்தோனேசிய நிலநடுக்கம் குறித்து திருத்தந்தை ஆழந்த வருத்தம் கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைவரோடும் தன் ஒருமைப்பாட்டையும், அனுதாபத்தையும் அவர் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இறந்தோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், காயமுற்றோர் நலமடையவும், தங்கள் உறவினர்களை இழந்தோர் ஆறுதல் பெறவும், திருத்தந்தை செபித்துவருவதாக இந்த அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் லொம்போக் (Lombok) தீவில், இஞ்ஞாயிறு, 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஏறத்தாழ 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், இந்த எண்ணிக்கை இனியும் உயரும் என்றும் ஊடகங்கள் கூறிவருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2018, 15:45