அமைதிப் புறாவை பறக்கவிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் அமைதிப் புறாவை பறக்கவிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

அயர்லாந்து திருத்தூதுப் பயணத்திற்கு புதிய அஞ்சல்தலைகள்

9வது உலக குடும்பங்கள் மாநாட்டுக்காக, திருத்தந்தை மேற்கொள்ளும் அயர்லாந்து திருத்தூதுப் பயணத்தின் நினைவாக புதிய தபால்தலைகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அயர்லாந்து திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, அந்நாட்டு அஞ்சல் அலுவலகம், இரு புதிய தபால்தலைகளை வெளியிட்டுள்ளது.

9வது உலக குடும்பங்கள் மாநாட்டுக்காக, அயர்லாந்துக்கு திருத்தந்தை மேற்கொள்ளும்  திருத்தூதுப் பயணத்தின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள ஒரு யுரோ தபால்தலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிப்புறாவைக் கையில் ஏந்தியிருப்பது போலவும், 1.50 யுரோ மதிப்புடைய பன்னாட்டு தபால்தலை, கடற்கரையில் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து நடப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஐந்து இலட்சம் ஒரு யுரோ தபால்தலைகளும், ஒரு இலட்சத்துக்கு அதிகமான ஒன்றரை யுரோ தபால்தலைகளும் அச்சிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தபால்தலைகளை வெளியிட்டுப் பேசிய, டப்ளின் பேராயர் Diarmuid Martin அவர்கள், திருத்தந்தைக்கு நாம் அளிக்கும் தகுதியான மதிப்பாக இவை உள்ளன என்றும், தபால்தலைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கு உள்ளவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று கூறினார். (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2018, 15:17