ரியோ இளையோர் நிகழ்வு ரியோ இளையோர் நிகழ்வு 

இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நம்பிக்கையை

குழந்தைகளுக்குரிய நம்பிக்கையை இறைவன் எதிர்பார்க்கிறார். திருத்தந்தையுடன் இத்தாலிய இளையோர் அடுத்த மாதம் சந்திப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தந்தையாம் இறைவனுக்கும் அவர் குழந்தைகளாகிய நமக்கும் இடையே நிலவும் உறவு குறித்து, தன் டுவிட்டர் பக்கத்தில் இஞ்ஞாயிறன்று செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'தங்களுக்கு வாழ்வை வழங்கியவரின் கைகளில் தங்களை முழுமையாக ஒப்படைக்கும் குழந்தைகளுக்குரிய நம்பிக்கையோடு தன்னை நோக்கி, 'அப்பா' என நாம் அழைப்பதை இறைவன் விரும்புகிறார்' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

மேலும், ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 தேதிகளில் உரோம் நகரில் கூடவிருக்கும் ஏறத்தாழ 50,000 இளையோரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்க உள்ளதைக் குறித்துக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் இளையோர்களுக்கான இத்தாலிய தேசிய அலுவலகத்தின் தலைவர் அருள்பணி மிக்கேலே ஃபாலப்ரெத்தி.

உரோம் நகரின் சிர்க்கோ மாஸிமோ என்ற சதுக்கத்தில் 11ம் தேதி மாலையில் திருத்தந்தையுடன் இணைந்து திருவிழிப்பு செபத்தில் ஈடுபடும் இந்த இளையோர் 12ம் தேதி காலை, வத்திக்கான், தூய பேதுரு பசிலிக்காவில் கர்தினால் குவால்தியோரோ பசெத்தி அவர்களால் நிகழ்த்தப்படும் திருப்பலியிலும் கலந்துகொள்வர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2018, 14:04