தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஆயர்களுடன் 

இறையியலாளர்கள் உடன்பிறப்பு பாலங்களைக் கட்டியெழுப்ப..

போஸ்னியாவில் ஜூலை 26-27 வரை நடைபெற்ற இறையியலாளர் கருத்தரங்கிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் செய்தி

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் நிலவுகின்ற பிரிவினைச் சுவர்களை அகற்றி, உடன்பிறப்பு உணர்வு கொண்ட பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கு, கலந்துரையாடலில் மிகுந்த ஆர்வம் காட்டுமாறு, அறநெறி இறையியல் துறையில் பணியாற்றும் அனைத்து கத்தோலிக்கரையும்  கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 “பாலத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நேரம், இன்று கத்தோலிக்க இறையியல் அறநெறி” என்ற தலைப்பில் சரயேவோவில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்ட பல நாடுகளின் இறையியலாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போஸ்னியா-எர்செகொவினா நாட்டின் சரயேவோவில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்,  எண்பது நாடுகளிலிருந்து ஏறத்தாழ 500 கத்தோலிக்க அறநெறியியல் இறையியலாளர்கள் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கை, உலகத் திருஅவையில் கத்தோலிக்க இறையியல் அறநெறி என்ற அமைப்பு(CTEWC) நடத்தியது.

அச்சம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகள் நிறைந்து, பதட்டநிலைகளும் பிரிவினைகளும் நிறைந்துள்ள இக்காலச் சூழலில், பிணைப்பின் நகரம் எனப்படும் சரயேவோ, மக்கள், கலாச்சாரங்கள், மதங்கள், வாழ்வின் கண்ணோட்டங்கள், அரசியல் பார்வை ஆகியவற்றிற்கிடையே, நெருக்கமான புதிய பாதைகள் கட்டப்படுவதற்கு அழைப்பு விடுக்கின்றது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2018, 15:45