தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ்,திருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதிய தலைவர் பவுலோ ருபீனி திருத்தந்தை பிரான்சிஸ்,திருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதிய தலைவர் பவுலோ ருபீனி 

திருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதிய தலைவர்

திருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதிய தலைவர் முனைவர் பவுலோ ருபீனி அவர்கள், ஒரு திருப்பீடத் துறையின் தலைவராக நியமனம் பெறும் முதல் பொதுநிலையினர்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான் செய்திகள்

ஜூலை,05,2018. திருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் தலைவராக முனைவர் பவுலோ ருபீனி (Paolo Ruffini) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 5 இவ்வியாழனன்று நியமனம் செய்தார்.

இத்தாலிய ஆயர் பேரவையின் TV 2000 என்ற தொலைகாட்சி நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றிவந்த ருபீனி அவர்கள், கடந்த 40 ஆண்டளவாக ஊடகத் துறையில் பணியாற்றிவருபவர்.

1956ம் ஆண்டு இத்தாலியின் சிசிலித் தீவில், பலெர்மோ என்ற ஊரில் பிறந்த ருபீனி அவர்கள், உரோம் நகரின் 'லா சாப்பியன்சா' பல்கலைக்கழகத்தில் தன் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

தன் 23வது வயதுமுதல் ஊடகத் துறையில் பணியாற்றிவந்துள்ள ருபீனி அவர்கள், இதழியல் தொடர்பான பல விருதுகளைப் பெற்றுள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2018, 15:39