தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ்  உக்ரைன்  Kyiv– Halyc  தலைமைப் பேராயர் Sviatoslav Shevchuk திருப்பீடத்தில் சந்திப்பு திருத்தந்தை பிரான்சிஸ் உக்ரைன் Kyiv– Halyc தலைமைப் பேராயர் Sviatoslav Shevchuk திருப்பீடத்தில் சந்திப்பு 

அருள்பணியாளர்களும் அவர்களது மேய்ப்புப்பணியும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் நாட்டுத் தலத்திருஅவையின் தலைமைப் பேராயர் Sviatoslav Shevchuk, அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்

மேரி டிரிசா- வத்திக்கான் செய்திகள்

ஜூலை,03,2018. நாம் கடவுளின் கொடைகளைப் பெறுவது, அவற்றை, மற்றவரோடு பகிர்ந்து கொள்வதற்காகவே என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை, இந்த ஜீலை மாதம் முழுவதும் இடம்பெறாது, ஆனால் ஞாயிறு மூவேளை செப உரைகள் மட்டும் இடம்பெறும் என்றும், புதன் பொது மறைக்கல்வியுரை வருகிற ஆகஸ்டில், திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கில் நடைபெறும் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் காலை திருப்பலி, இந்த ஜூலை, மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெறாது என்றும், இத்திருப்பலி மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.

இன்னும், இச்செவ்வாய் காலையில், உக்ரைன் நாட்டுத் தலத்திருஅவையின் தலைமைப் பேராயர் Sviatoslav Shevchuk, அருள்பணியாளர் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் Cláudio Hummes, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால், Luis F. Ladaria Ferrer, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் கர்ட் கோக், சட்ட விளக்க திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Filippo Iannone ஆகியோரையும், இச்செவ்வாய் காலையில் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2018, 15:59