தேடுதல்

சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 160919 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 160919  (© Vatican Media)

ஆட்சியாளர்களுக்காக செபிக்கும் கடமையை கொண்டுள்ளனர் குடிமக்கள்

திருத்தந்தை : நாம் ஆட்சியாளர்களுக்காக செபிக்கும்போது, அவர்களும் குடிமக்களுக்காக செபிக்கும் நிலை ஏற்படும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்  :  வத்திக்கான் செய்திகள்

அரசியல்துறையில் ஈடுபட்டிருப்போர் ஒவ்வொருவரும் தங்கள் அழைப்புக்கு இயைந்தவகையில் மாண்புடன் செயல்பட உதவும் நோக்கில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்காக செபிப்போம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோடைக்கால விடுமுறைக்குப்பின் இத்திங்களன்று, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் பொதுமக்களுடன் காலை திருப்பலி நிறைவேற்றுவதை மீண்டும் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளின் முதல் வாசகத்தை மையமாக வைத்து, ஆட்சியாளர்களுக்காக செபிக்க வேண்டிய நம் கடமையை வலியுறுத்தினார்.

நாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருப்போருக்காக செபிக்க வேண்டிய கடமையை கொண்டுள்ள குடிமக்கள்,  இன்றைய காலக்கட்டத்தில்  தங்கள் ஆட்சியாளர்களுக்காக இறை ஆசீரைக் கேட்டு செபிக்காமல், அவர்களைத் தனிமைப்படுத்த விரும்புகின்றனர் என்ற கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அரசியல்வாதிகளுக்காக செபிப்பது என்பது அவர்களை அவமானப்படுத்துவதுபோல் ஆகும் என எண்ணும் இன்றைய உலகில், அத்தகைய எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒருவருக்கொருவர் செபிக்க வேண்டிய கடமையுணர்வுடன் நாம் செயல்படவேண்டும் என்றார் திருத்தந்தை.

அரசியல் என்பது அழுக்கு நிறைந்தது என ஒதுங்கி விடாமல், நாம் ஆட்சியாளர்களுக்காக செபிக்கும்போது, அவர்களும் குடிமக்களுக்காக செபிக்கும் நிலை ஏற்படும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பணியாளருக்காக வேண்டுகோள் வைத்த நூற்றுவர் படைத்தலைவனை அதற்கு உதாரணமாக முன்வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2019, 17:58
அனைத்தையும் படிக்கவும் >