சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை  (Vatican Media)

வெளிவேடம் என்ற புளிப்பு மாவு உருவாக்கும் ஆபத்து

பரிசேயரின் வெளிவேடம் என்ற புளிப்பு மாவை பெற்றவர்கள், தாங்கள் செய்யும் நற்செயல்கள் அனைத்தையும், எக்காளம் ஒலித்து அறிவிப்பர். உள்ளூர அவர்களிடம் உண்மையான அன்போ, பாசமோ வளராது – திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'பரிசேயரின் வெளிவேடமாகிய புளிப்பு மாவை' நிராகரித்து, 'தூய ஆவியார் என்ற புளிப்பு மாவை' ஏற்று வாழவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தனது உறைவிடமான சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி ஆற்றிய திருத்தந்தை, இன்றைய முதல் வாசகத்தையும், நற்செய்திப் பகுதியையும் மையமாக்கி, மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

வெளிவேடமாகிய புளிப்பு மாவு, வெளிப்புறத்தில் கவர்ந்திழுக்கும் வண்ணம் தோற்றங்களை உருவாக்கும் அதே வேளையில், உள்ளுக்குள் ஆபத்தான பழக்க வழக்கங்களைப் புகுத்திவிடும் என்று, திருத்தந்தை, தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

பரிசேயரின் வெளிவேடம் என்ற புளிப்பு மாவை பெற்றவர்கள், தாங்கள் செய்யும் நற்செயல்கள் அனைத்தையும் எக்காளம் ஒலித்து அறிவிப்பர் என்றும், உள்ளூர அவர்களிடம் உண்மையான அன்போ, பாசமோ வளராது என்றும், திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

தூய ஆவியார் என்ற புளிப்பு மாவைப் பெற்றுக்கொள்வோர், மீட்பும், உரிமைப்பேறும் பெறுவர் என்று, திருத்தூதர் பவுல் கூறியுள்ளதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2018, 15:02
அனைத்தையும் படிக்கவும் >