தேடுதல்

புனித காவல் தூதர்கள் திருநாளில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரை வழங்குதல் புனித காவல் தூதர்கள் திருநாளில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரை வழங்குதல்  (Vatican Media)

காவல் தூதர்கள் திருநாளன்று திருத்தந்தை வழங்கிய மறையுரை

முன்னோக்கிச் செல்ல அச்சம் கொள்ளும் நேரங்களில், நம்மை வழிநடத்தி, முன்னே அழைத்துச் செல்பவர் நம் காவல்தூதரே - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வென்ற பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு உதவியாக, கடவுள் வாக்களித்து, தரப்பட்ட துணையாளர்கள், காவல் தூதர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அக்டோபர் 2, இச்செவ்வாய் கொண்டாடப்பட்ட புனித காவல் தூதர்களின் திருவிழாவன்று, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், திருத்தந்தை வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு மனிதருக்கும், மனித வழிகாட்டியும், பாதுகாப்பாளரும் தேவை என்ற நிலையில், அப்பணிகளை நிறைவேற்றுபவரே காவல் தூதர்கள் என்று கூறியத் திருத்தந்தை, முன்னே செல்லாமல், ஒரே இடத்தில் சோர்ந்து அமர்வதும், முன்னோக்கிச் செல்ல அச்சம் கொள்வதும் ஆபத்து நிறைந்தது என்றும், அத்தகைய நேரங்களில், நம்மை வழிநடத்தி முன்னே அழைத்துச் செல்பவர் நம் காவல்தூதரே என்றும் தன் மறையுரையில் கூறினார்.

நாம் முன்னோக்கிச் செல்லும் வேளையில், தவறான பாதையைத் தெரிவு செய்யும் ஆபத்து உள்ளதால், நம் காவல் தூதர் நமக்கு நல்வழியைக் காட்ட விழைகிறார், ஆனால், நம் தரப்பிலிருந்து, அவரது உதவியை நாடி செபிக்கவேண்டியது அவசியம் என்று, தன் மறையுரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள நம் காவல் தூதர்களுக்கு நாம் செவிமடுக்க வேண்டும், ஏனெனில், நம்மோடும், இறைவனோடும் நெருங்கிய உறவு கொண்டுள்ள காவல் தூதர், இறைவனுக்கும், நமக்குமிடைய ஒரு பாலமாகச் செயலாற்றுகிறார் என்று திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2018, 16:51
அனைத்தையும் படிக்கவும் >