தேடுதல்

சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 261018 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 261018  (Vatican Media)

அமைதிக்கு இட்டுச்செல்லும் பணிவும், கனிவும் - திருத்தந்தை

ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகிய உயர்ந்த இலக்குகளை அடைய, நம்மிடம் பணிவு, கனிவு, பெருந்தன்மை, பொறுமை ஆகியவை தேவை - திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பன்னாட்டு உலக நிறுவனங்களும் அமைதியைக் கொணர்வதற்கு தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில், அமைதியைக் கொணர்வது நமது தலையாயப் பணி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தன் உறைவிடமான சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, சிறையில் இருக்கும் வேளையிலும், தன் மக்களாகிய எபேசியருக்கு, திருத்தூதர் பவுல், தன் திருமடல் வழியே, அமைதியுடன் இணைந்து வாழும்படி வேண்டுகோள் விடுத்ததை, தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

"ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே... ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே" என்று, ஒற்றுமையை வலியுறுத்தும் சொற்களை புனித பவுல் மீண்டும், மீண்டும் கூறியுள்ளார் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகிய உயர்ந்த இலக்குகளை அடைய, நம்மிடம் பணிவு, கனிவு, பெருந்தன்மை, பொறுமை ஆகியவை தேவை என்று, திருத்தூதர் கூறும் அறிவுரையை, திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

நம்மிடையே ஒற்றுமை குலையும் வேளையில், சாத்தான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'ஒரே உடலும், ஒரே மனமும்' கொண்டிருக்குமாறு இயேசு இறுதி இரவுணவில் செபித்ததை, நாம் எப்போதும் நம் மன்றாட்டாகக் கொண்டிருக்கவேண்டும் என்று, தன் மறையுரையின் இறுதியில் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2018, 10:18
அனைத்தையும் படிக்கவும் >