சாந்தா மார்த்தாவில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி சாந்தா மார்த்தாவில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி  (© Vatican Media)

மௌனம் வெற்றியைக் கொணரும்

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, தாழ்ச்சியுடன் செயல்பட்டதால், மக்களின் கோபத்துக்கு உள்ளானார் இயேசு, நாசரேத்தில்...

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரிவினைகளையும் அவதூறுகளையும் நாடும் உலகினர் நடுவே, உண்மை மௌனமாக்கப்படுகிறது என, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு கிறிஸ்து நாசரேத்துக்கு திரும்பி வந்தபோது, அவர் சந்தேகக் கண்களோடு நோக்கப்பட்டது குறித்து உரைக்கும் இன்றைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவறாக புரிந்துகொள்ளப்படும் வேளைகளில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை இந்நாளைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது என்றார்.

பெரிய விடயங்களை தன்னிடமிருந்து எதிர்பார்த்த மக்கள் முன்னால் தாழ்ச்சியுடன் செயல்பட்டதால் அவர்களின் கோபத்திற்கு இயேசு உள்ளானார் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட நினைத்த மக்களிடமிருந்து அமைதியாகக் கடந்துபோன இயேசுவின் மாண்பு இங்கு வெளிப்படுகின்றது என்றார்.

தன்னை குருத்து ஞாயிறன்று புகழ்ந்து பாடிய மக்களே, புனித வெள்ளியன்று, தன்னை, சிலுவை சுமக்க வைத்தனர் என்பதை உணர்ந்து, அமைதியாக இருந்த இயேசு, நாசரேத்திலிருந்து தப்பிப் போனதற்கு, அவர் நேரம் இன்னும் வராமலிருந்ததே காரணம் என்று கூறினார்.

மௌனம் வெற்றியடையும், ஆனால், அது சிலுவையின் வழியேதான் இயலக் கூடியதாகிறது என்று கூறயத் திருத்தந்தை, பல்வேறு விவாதங்களில், கூச்சல்களால் குடும்பங்கள் அழிவுக்குள்ளாகும்போது, அது, தீயோனின் வெற்றியாகிறது, அதை தடுக்க வேண்டுமெனில், மௌனம் காக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது, எனவும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2018, 14:18
அனைத்தையும் படிக்கவும் >