எண்டோசா தலத்திருஅவையில் புலம்பெயர்ந்தோர்க்கு அடைக்கலம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கின்சாசாவின் புறநகர்ப் பகுதியான என்டோஷோவில் உள்ள தூய பிரான்சிஸ் சவேரியார் பங்குத்தளத்தில் ஏறக்குறைய 2,000 இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், கோமாவில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து வாசலெண்டோ போராளிகள் தான் என்று உள்ளூர் தலத்திருஅவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வசலெண்டோக்கள் அரசாங்க சார்பு போராளிகள் குழுவைச் சேர்ந்தவர்கள் உணவு தேடி சாதாரண மக்களின் வீடுகளுக்குள் நுழைகிறார்கள் என்றும், உணவுப்பொருள் இல்லையென்றால் பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்திச் சென்றுவிடுவதாக மிரட்டுகின்றார்கள் என்றும் பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் மக்கள் வாழும் சூழல் குறித்துத் தெரிவித்துள்ளது.
M23 என்ற அமைப்பின் கிளர்ச்சியாளர்களால் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள வன்முறையினால் மக்களுக்கு ஆபத்து ஒருபுறம் இருந்தாலும், கோமாவில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து வாசலெண்டோ போராளிகளால்தான் என்று உள்ளூர் தலத்திருஅவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களும் அரசாங்க சார்பு போராளிகள் குழுவைச் சேர்ந்தவர்களுமான வசலெண்டோக்கள், M23 என்ற அமைப்பின் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தை எதிர்கொள்ள வழக்கமான இராணுவத்துடன் இணைந்து போராடி வருகின்றனர்.
கோமா கைப்பற்றப்பட்ட பிறகு, வழக்கமான வீரர்களில் பெரும்பாலோர் சரணடைந்தனர் அல்லது MONUSCO ப்ளூ ஹெல்மெட்களில் தங்களை ஒப்படைத்துக் கொண்டனர் என்றும், M23 மற்றும் ருவாண்டாக்கள் ஒழுங்கை மீட்டெடுக்க முயற்சிக்கின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கும் நிலையில், விமான நிலையத்திற்கு அருகில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
"கோமாவில் மனிதாபிமான நிலைமை இன்னும் கடினமாகவே உள்ளது, ஏனெனில் மின்சாரமின்மை, நீர்பற்றாக்குறை, போன்றவற்றினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், கின்சாசாவின் புறநகர்ப் பகுதியான என்டோஷோவில் உள்ள தூய பிரான்சிஸ் சவேரியார் பங்குத்தளத்தில் தண்ணீரின்றி மற்றும் ஆபத்தான நிலையில் இருந்த ஏறக்குறைய 2,000 இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அருகிலுள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 1,600 பேரும் இவர்களில் அடங்குவர் என்றும் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்