தேடுதல்

மனித வர்த்தகத்திற்கு எதிராகப் போராட்டம் மனித வர்த்தகத்திற்கு எதிராகப் போராட்டம்   (ANSA)

மனித வர்த்தகத்திற்கு எதிராகப் பணியாற்றிய சகோதரிகளுக்கு விருது!

மனித வர்க்கத்தால் பாதிக்கப்பட்டு அவமானம் மற்றும் அதிர்ச்சியை அனுபவிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் இது நம்பிக்கையின் சின்னம் : அருள்சகோதரி செலி தாமஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அருள்சகோதரி செலி தாமஸ் பொதுநலத்திற்கான  விருதையும், தாய்லாந்தைச் சேர்ந்த அருள்சகோதரி Francoise Jiranonda மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த அருள்சகோதரி Patricia Ebegbulem ஆகியோருக்கு மனித வர்த்தகத்திற்கு எதிரான பணிகளுக்காக மேலும் இரண்டு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன என்று ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனித வர்த்தகத்திற்கு எதிரான இயக்கத்திற்கு கத்தோலிக்கஅருள்சகோதரிகளின் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாக இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவ்விருது வழங்கும் விழா கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி இலண்டனில் நடைபெற்றது என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

இவ்விருது குறித்து தெரிவித்த அமலோற்பவ அன்னை சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Seli Thomas அவர்கள், மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டு அவமானம் மற்றும் அதிர்ச்சியை அனுபவிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் இது "நம்பிக்கையின் சின்னம்"  என்று கூறினார்.

மனித வர்த்தகத்தில் இலிருந்து தங்கள் சமூகங்களைப் பாதுகாப்பதில் துணிச்சல், படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் சாதனை ஆகியவற்றைக் காட்டியதற்காக சகோதரி செலி மேலும் இரண்டு அருள்சோகோதரிகளுடன் இந்த விருதைப் பெற்றார் என்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணகரில் அருள்சகோதரி செலி தாமஸ் பணியாற்றி வருகின்றார் என்றும் சுரண்டல் மற்றும் வலைப்பின்னல்களில் சிக்கித் துயருறும் இளம் பெண்களைக் காப்பாற்றி வருவதாகவும் ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

இலவச சட்ட உதவிகளை வழங்குவதன் வழியாகவும், பாதுகாப்பான இடம்பெயர்வு மற்றும் மனித வர்த்தகம் குறித்து பெண்களுக்கும் சமூகத்துக்கும் தெரிவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சி முகாம்களை  நடத்துவதன் வழியாகவும்  அவர்களுக்கு உதவி வரும் அருள்சகோதரி செலி தாமஸ் கிருஷ்ணாநகரின் விலைமகளிர் விடுதிகளில் வாழும் அப்பெண்களின் குழந்தைகளையும் அவர் அணுகி பல்வேறு வழிகளில் உதவி வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2023, 13:49