காசாவிற்கு ஆதரவளிக்கும் பாலஸ்தீன பாப்பிறை மறைப்பணி கழகம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் வீடுகள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பதற்கு முன்னதாக, இந்த மோதல் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் நம்புவதாகவும், அதற்காகத் தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார் பாலஸ்தீனத்திற்கான பாப்பிறை மறைப்பணிக் கழகத்தின் இயக்குநர் Joseph Hazboun
போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தாங்கள் முடிந்தவரை பல நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்க முயற்சிப்பதாகவும், பாதிப்படைந்துள்ள மக்களுக்கு ஆறுதலையும் ஆதரவையும் வழங்குவதாகவும், மேலும், அம்மக்களுக்குத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் Hazboun
குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்கப் பங்குத்தளமான திருக்குடும்ப ஆலயத்திலிருந்தும், ஆர்த்தடாக்ஸ் சபையின் புனித Porphyrius ஆலயத்திலிருந்தும் மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீருக்கான உதவி கேட்டுத் தங்களுக்கு அழைப்புகள் வந்தது எனவும், இதனால், நியூயார்க்கில் உள்ள தங்கள் தலைமையகத்துடன் பேசிய பிறகு அவர்களுக்கு உதவி செயய தாங்கள் ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார் Hazboun
2009-ஆம் ஆண்டு முதல் காசாவில் நிகழ்ந்துவரும் பல்வேறு போர்கள் காரணமாக, மக்களின் பல்வேறு வகையான தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகப் பாலஸ்தீனத்திற்கான பாப்பிறை மறைப்பணிக் கழகம் செயலாற்றி வருகின்றது. இதில் செபமாலை அன்னை சகோதரிகளின் பள்ளிக்கான நிதியுதவி, போரின்போது மன உளைச்சலுக்கு ஆளான குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டங்கள், உணவு ஆதரவு திட்டங்கள் மற்றும் வயதானவர்கள் மற்றும் ஏழைகளுக்கான மானியங்களும் இத்திட்டங்களில் அடங்கும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்